மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும், நாளையும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வங்கி ஊழியர்கள், ஆட்டோ, டாக்ஸி ஊழியர்கள் என சுமார் 20 கோடி தொழிலாளர்கள் நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கி சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இருக்க, வங்கி சேவைகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பதாக பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டம் தொடரும் பட்சத்தில் இந்த மாற்று ஏற்பாடு தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.