பெட்ரோல் விலை நாளுக்கு நாள் கணிசமான ஏற்ற இறக்கத்தை கண்டுவருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேற்றைய விலையிலிருந்து இன்று 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105.18 ரூபாய்கும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 33 காசுகள் உயர்ந்து 95.33 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும். உயர்த்தப்பட்ட இந்த பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் இது சாமானியர்களுக்கும் சிரமமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.