ஆண்டுதோறும் உலக அளவில் வெளியாகும் சிறந்த திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக தரமான திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. சிறந்த திரைப்படங்கள் மட்டுமல்லாது நட்சத்திரங்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விழாவில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை ஜப்பான் நாட்டின் திரைப்படமான (டிரைவ் மை- Drive my car) கார் என்ற திரைப்படமும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதினை (தி வின்ட்ஷீல்ட் வைபர்-The windshield wiper) திரைப்படம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.