திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வரும் நிலையில் தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று துபாய்க்கு கிளம்பினார். அதன்படி துபாயில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் அங்கு தமிழர்களின் கலை, கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்க உள்ளார். மேலும் அங்கு பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.