பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக சென்னை ஐ-கோர்ட் விளங்கி வரும் நிலையில், அங்கு தற்போது புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் உத்தரவுப்படி சென்னை ஐ-கோர்ட்டில் இன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஐ-கோர்ட்டில் நீதிபதிகளுக்கான 16 இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு நீதிபதிகளை ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். அதன்படி சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக என். மாலா மற்றும் எஸ்.சௌந்தர்யா ஆகியோர் ஜனாதிபதியின் நேரடி உத்தரவுப்படி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனத்திற்கு பிறகு சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.