சர்ச்சைகள், ஆபாச வார்த்தைகள், இணையதளத்தில் தனிமனித தாக்குதல் உள்ளிட்டவற்றை நிகழ்த்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் ஒரு கூட்டம் அலைந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சர்ச்சைகளுக்கு சற்றும் சளைக்காதவர் நடிகை மீரா மிதுன். இவர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பலமுறை சிறைவாசம் அனுபவித்து வந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருவதால் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமினில் சமீபத்தில் வெளிவந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.