பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற நான்கு மாநிலங்களான உத்ரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து பாஜக தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட சிலருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதால் முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜகவிற்கு சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.