கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருந்துவரும் நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என அனைத்தையும் மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 10, 12ம் வகுப்பு, இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த இரண்டு வாரங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.