கொரோனா காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வரை கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து உத்திரபிரதேசம், சண்டிகர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஹரியானா, உத்தர காண்ட், டெல்லி மற்றும் லடாக் உள்ளிட்ட 9 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.