நாட்டின் 73-வது குடியரசு தின விழா வருகிற வியாழக்கிழமை ஜனவரி 26ம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி முதல் அந்தந்த மாநிலங்களில் இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்வரும் முதல் குடியரசு தின விழா இது. இந்த குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் விழாவுக்காக மேடை அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நடைபெறவுள்ள பரிசளிப்பு நிகழ்வுகள் மற்றும் அலங்கார வாகனங்களின் பேரணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.