வரும் மார்ச் மாதத்திற்குள் தற்போது உள்ள அனைத்து வைரஸ்களும் முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா மற்றும் அதன் திரிபு வைரஸான ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடு முழுவதும் தற்போது வரை பல்வேறு கட்டுப்பாடுகள், பாதிப்பு நிலவரத்தைப் பொறுத்து அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது வரை உள்ள கொரோனா மற்றும் அதன் திரிபு வைரஸான ஒமிக்ரான் ஆகியவற்றின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வரும் எனவும், மார்ச் மாதங்களுக்கு பிறகு உலகின் மற்ற பகுதிகளில் அதன் தாக்கம் குறைய தொடங்கும் எனவும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.