அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தார். சமீபத்தில் தலைமறைவாக இருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனிப்படை மூலம் போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திரபாலாஜி தரப்பில் தொடரப்பட்ட முன்ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அதன்படி, தற்போது உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இன்று காலை 7.30 மணிக்கு மத்திய சிறைச்சாலையிலிருந்து ராஜேந்திரபாலாஜி விடுதலையானார்.