விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் வெகுவான ரசிகர்களை கொண்ட ஒரு தொடர் என்றால் அது பாரதி கண்ணம்மா. இந்த கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி சமீபத்தில் விலகிய நிலையில் அவருக்கு பதில் வினுஷா என்பவர் இத்தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த சீரியலில் வரும் ஞாயிறன்று ஒளிபரப்பாகும் சிறப்பு எபிசோடில் நடிகை ரோஹினி மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இதற்கான பிரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. சுமார் 650 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடர் டிச.14ம் தேதியன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை தொடர்ந்து 3.30 மணிநேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த, சிறப்பு எபிசோடில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடிக்க இருப்பதாக வெளியான ப்ரோமோவில் சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது.