யூட்யூபில் பல்வேறு சேனல்கள் நாளுக்கு நாள் தோன்றி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அல்லது பிரபலங்களை விமர்சித்துப் பேசி பிரபலமாக நினைக்கும் ஒரு கும்பல் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்த மாரிதாஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து வருவார். அதன்படி, இவர் சமீபத்தில் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்ததாகக் கூறி மாரிதாஸ் மீது, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 23ம் தேதி வரை அவரை சிறையில் வைக்க மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே முருகனின் கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்த கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மற்றும் திமுக குறித்து அவதூறாக பேசியாக சாட்டை துரைமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.