பெட்ரோல் விலை நாளுக்கு நாள் கணிசமான ஏற்ற இறக்கத்தை கண்டுவருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று பெட்ரோல், டீசல் விலையில் 35வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை 101.40 ரூபாய்கும், டீசல் விலை 91.43 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும்.