கோவை பள்ளி மாணவி பொன்தரணியை அடுத்து கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடந்து வந்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படும் கணித ஆசிரியர் சரவணன் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதம் தற்போது எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது; ‘தான் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் மாணவர்கள் தன்னை தவறாக பார்க்கின்றனர். மாணவர்களை கண்டித்ததற்கும், கடுமையாக நடந்து கொண்டதற்கும் வருந்துவதாக கூறி மன்னிப்பும் கேட்டு எழுதியுள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணைக்குப் பிறகே இந்த சம்பவம் குறித்த உண்மை நிலவரம் தெரியவரும்.