வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது வரை வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் மத்திய அரசு ரூ.2078 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது கன மழை மற்றும் வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்திய குழு நவம்பர் 21ம் தேதி சென்னை வருகை தர உள்ளது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு வரும் 21ம் தேதி சென்னை வருகிறது. மேலும், நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு தமிழகம் வர உள்ளது.