பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் கண்டன. இதில் 27 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செலுத்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘சென்னை சிங்கங்கள் மீண்டும் ஒருமுறை தனது கர்ஜனையை வெளிப்படுத்தி உள்ளது. 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணிக்கும் அந்த வெற்றியைக் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இது வெற்றியை கொண்டாட தோனிக்காக சென்னை காத்திருக்கிறது.
என தெரிவித்துள்ளார்.