நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. காலை முதலே மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் இன்று தொடங்கி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மேலும் வார இறுதி நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சுமார் 5,422 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக கூறியிருந்தது. அதன்படி, சென்னையிலிருந்து ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்காக மட்டும் அரசு பேருந்துகளின் மூலம் சுமார் 2,43,900 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.