சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூப் சேனலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை கூறி வருவது வழக்கம். இவர் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர். இந்நிலையில் இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு மேடை பேச்சுகளில் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருவது வழக்கம். அப்படி நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி ஏற்கனவே சிறை சென்றார். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதல்வர், கேரள முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்தை கேலி செய்தும் கருத்து ஒன்றை கூறினார். இவர் கூறிய கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி நிலையில், சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 25ம் தேதி வரை சாட்டை துரைமுருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.