வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்யும் இந்த கனமழை காரணமாக மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.