கோவை, செப்.30
பொள்ளாச்சி அருகே 50 ரூபாயை கொடுத்து தாயை ஏமாற்றி பைக்கில் குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் பழங்குடியின தம்பதியினர். இவர்கள் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் அவர்கள் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு சங்கீதாவும், அவரது குழந்தைகள் மட்டும் இருந்தனர். அப்போது குழந்தை அழுததால் அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்கள் குழந்தையின் தாயிடம் 50 ரூபாயை கொடுத்து தின்பண்டங்கள் வாங்கி கொடுக்கும்படி கூறினர். அதை நம்பிய அந்த பெண் 50 ரூபாயை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த கடைக்குச் சென்றபோது அந்த மர்ம நபர் குழந்தையை கையில் வைத்து கடத்திச் சென்றதை பார்த்த சங்கீதா சத்தம் போட்டபடி பின்னால் ஓடினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து மாயமாகினர். இதுகுறித்து ஆனைமலை போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி நாகரத்தினம் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு அங்கு பதிவாகி இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.