தமிழக சினிமாவில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். அரசியல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த தேர்தல் பிரச்சாரங்களில் கூட ஈடுபடாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்ற அவர் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.