பொதுவாக வாகனங்களில் அதன் உரிமையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் வாகனங்களின் அவர்களுக்கு பிடித்தார் போல தலைவர்கள், கடவுளர்கள் ஸ்டிக்கரை ஒட்டுவது வழக்கம். இந்நிலையில், இதுகுறித்து மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள் மற்றும் கடவுள்களின் புகைப்படங்கள் ஆகியவை ஒட்டப்பட்டிருந்தால், அவற்றை 60 நாட்களில் நீக்க வேண்டும் என கூறியுள்ளது.