தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், சமீபத்தில் பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி காவல்துறை ஆணையரிடம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்திருந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கமலாலயம் வரை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று போராட்டம் நடத்திய ஜோதிமணியை தமிழக போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.