இந்தியாவின் 75வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று காலை சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘இந்த ஆண்டில் பாரதியாரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் இது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிக்கு அரசு சார்பில் விழா எடுக்க திட்டம் உள்ளது. மாநிலம் முழுவதும் சுதந்திர தின விழாவில் முதல்வர்கள் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்த சுதந்திர தின விழாவில் முதல்வராக தேசிய கொடியை நான் ஏற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு என் நன்றிகள்’ என தெரிவித்துள்ளார்.