பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டில் இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலுக்கு திரும்புவது வழக்கம். அந்தவகையில், 2004ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் நடிகை நமீதா. தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். ஆனால் எதிர்பார்த்த படவாய்ப்புகள் இல்லாததால் இப்போது சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் முடிவை எடுத்துவிட்டார். ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.