முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருகின்றனர். சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவல் அறிந்த அதிமுகவினர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்தனர்.
இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இந்த சோதனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.