கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விடுமுறை நாட்களிலும் ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.