கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், கேரள மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 43, 529 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 95 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது ரயிலில் பயணம் மேற்கொள்ள கொரோனா சான்று கட்டாயம் வேண்டும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில்: ‘கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நோய் பரவல் குறைய வாய்ப்புள்ளது. மேலும், கேரளாவுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் ரயில் மூலம் வருகின்றனர். இவ்வாறு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கேரளாவில் பொதுமக்கள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என அவர் கூறினார்.