தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்தை சந்தித்து, திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானக் கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க உரிமைச் கோரினார். உடன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆர். எஸ்.பாரதி ஆகியோர் உடன் உள்ளனர்.