10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. திமுக தனியாக 125 இடங்களையும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றது. திமுக கூட்டணியுடன் சேர்த்து 159 இடங்களை கைப்பற்றியது.
இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக அனைவராலும் ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு நாளை சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சராக உரிமை கோரி கடித்தை வழங்குகிறார். அதன்பின் 7 ஆம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.