அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
சிவா இயக்கத்தில் உருவாகும் ’அண்ணாத்த’ படத்தில் பிரகாஷ்ராஜ், நயன்தாரா, மீனா, குஷ்பு, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைகிறார். கொரோனா காரணமாக ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்து. கடந்த டிசம்பர் மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு தொற்று இல்லை என உறுதியானது. இருப்பினும் ஐதராபாத்தில் தனிமைப்படுத்தி கொண்டார் ரஜினி. மீதமுள்ள படிப்பு பணி தொடங்கியதால் இன்று ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு புறப்பட்டுச் சென்றார்.