நாடு முழுவதும் சிறப்பான வினியோக செயல்பாட்டிற்காக பண்டிகை காலத்திற்கு முன் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பருவகால வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அமேசான் இந்தியா இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய பருவகால வேலைவாய்ப்புகளானது அதன் வினியோக செயல்பாடுகளை உயர்த்தவும், வரவிருக்கும் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யவும் இந்நிறுவனத்தின் வினியோக திறன்களை அதிகரிக்கவும் உதவும்.
அமேசானில் புதிதாக இணைந்துள்ள நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே இதில் உள்ள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை எடுக்கவும், பேக் செய்யவும், பாதுகாப்பாக திறமையாக அவற்றை வினியோகிக்க அவர்களுக்கு ஆதரவளிப்பார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களின் அதிவேக தேவையை பூர்த்தி செய்ய இந்நிறுவனம் இதன் கூட்டு நிறுவனங்களான சரக்கு வாகன கூட்டாளர்கள், பேக்கேஜிங் விற்பனையாளர்கள், ‘ஐ ஹேவ் ஸ்பேஸ்’ வினியோக கூட்டாளிகள், அமேசான் ப்ளெக்ஸ் கூட்டாளர்கள் மற்றும் தூய்மை பராமரிப்பு நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர் நிறைவேற்றுதல் செயல்பாடுகள் துணைத் தலைவர் அகில் சக்சேனா கூறுகையில், இந்த பண்டிகை காலங்களில், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வாடிக்கையாளர்களும் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே விரைவான, பாதுகாப்பான மற்றும் தங்குதடையில்லாத இணையவழியிலான மின்னணு வர்த்தக அனுபவத்தை பெற அவர்களுக்கு சிறப்பான சேவை செய்ய இருக்கிறோம். இந்த ஆண்டு, வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற 1 லட்சத்துக்கும் அதிகமான பருவகால கூட்டாளிகள் எங்களுடன் இணைகிறார்கள். தொற்றுநோய் பலருக்கு வாழ்க்கையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டில் 10 புதிய பொருட்கள் கையாளும் மையங்களையும் திறக்கவும் ஏற்கனவே உள்ள 7 மையங்களை விரிவுபடுத்தப்போவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவனம் அறிவித்திருந்தது. அமேசான் இந்தியா தற்போது 32 மில்லியன் கன அடிக்கு மேல் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இப்பிராந்தியங்களில் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மேலும் அமேசான் இந்தியா தனது பொருட்கள் வரிசைப்படுத்தல் மைய செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 5 புதிய வரிசைப்படுத்தல் மையங்களை துவக்கப்போவதாகவும் 19 மாநிலங்களில் தற்போதுள்ள 8 வரிசைப்படுத்தல் மையங்களை விரிவுபடுத்தப்போவதாகவும் அறிவித்தது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் வினியோக சேவை கூட்டாளர் மையங்கள் சுமார் 200 மையங்களை இணைத்திருப்பதன் மூலம் இந்நிறுவனம் தனது வினியோக உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்புகளை வழங்கும் அமேசான் ப்ளெக்ஸ் மற்றும் ‘ஐ ஹேவ் ஸ்பேஸ்’ போன்ற அதன் வினியோக திட்டங்களையும் இந்நிறுவனம் விரிவுபடுத்தி உள்ளது.